பாடம் 5 : பயிற்சி 4

IV. சொற்களின் பாவனையைப் பொறுத்து அவை வகைப்படுத்தப் படுகின்றன.

a) இலக்கணமுடைய சொல். நீண்டகாலமாக மாற்றமின்றி வழங்கப்படுவது இலக்கணமுடைய சொல்: எ+கா : மரம், வாழை

b) இலக்கணப்போலி: இலக்கணத்துக்கு உட்பட்ட இருசொற்கள் முன்பின்னாக மாறி வழங்கினால் அது இலக்கணப்போலி எனப்படும்.

எ+கா : இல்+வாய் =இல்வாய்=வாயில்

இல்+முன் =இல்முன்= முன்றில்

c)எழுத்துப்போலி: ஒரு சொல்லின் முதல் இடை கடை எழுத்துக்கள் விகாரம் பெற்று புதுச் சொல் அமைதல் எழுத்துப்போலி எனப்படும்.

எ+கா: ஐயர் ->அய்யர் ஐந்து -> அஞ்சு கோயில்-> கோவில் சாம்பல் -> சாம்பர்

d) மரூஉ சொற்கள்: இலக்கணம் சிதைவடைந்து உருமாறிய போதும் . தமிழ் வழக்கில் ஏற்றுக்கொள்ளப் பட்ட சொற்கள் மரூஉச் சொற்கள் எனப்படும்.

எ+கா: அருமருந்தன்ன -> அருமந்ததிகதி -> தேதி

ஆசிரியருடன் கலந்தாய்வு செய்து ஐந்து மரூஉ சொற்களை எழுதுக

1)..................................................................................................................................

2)..................................................................................................................................

3)..................................................................................................................................

4)..................................................................................................................................

5)..................................................................................................................................