பாடம் 9 : பயிற்சி 7

VII. பெயர்ச் சொற்கள், காரணப் பெயர், இடுகுறிப் பெயர், காரண இடுகுறிப் பெயர் எனவும், மூன்றாக வகுக்கப்படும்.

1). ஒரு பெயர்ச் சொல் ஏதாவது ஒரு காரணம் பற்றி வழங்கும் போது, “காரணப் பெயர்” என வரும். (உ- ம் : நாற்காலி, பறவை)

.................................................................................................................................

2). ஒரு காரணமும் இன்றி முன்னோர் இட்ட குறியாக வழங்கி வரும் போது, “இடுகுறிப் பெயர்” என வரும்; (உ- ம் : மரம், பொன்)

.................................................................................................................................

3). காரணம் கருதிய போது ஒரு பொருளையும் காரணம் கருதாத போது இடுகுறி அளவாக நின்று பொருளை விளக்குவதுமான பெயர். “காரண இடுகுறிப் பெயர்” எனவும் வழங்கப்படுகின்றது. (உ-ம் : அந்தணன், தருமன்)

.................................................................................................................................

பின்வரும் சொற்கள் எவ்வகையினைச் சேர்ந்தவை என விளக்குக.

1). மலை

.................................................................................................................................

2). பொன்னன்

3). முள்ளி

4).பனை

5). காப்பு