பாடம் 14:பெண்ணியத்தின் வளர்ச்சி

பெண்களின் சமத்துவமின்மையை எதிர்க்கும் செயற்பாடுகளின் கோட்பாட்டுத் தொகுப்பை பெண்ணியம் (குநஅinளைஅ) எனக் கூறுகின்றனர்;. பெண்ணியம்; எனும் பதம் பாலினசமத்துவக் கோட்பாடுகளையும், பெண் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகச் செயற்படும் இயக்கங்களையும் குறிக்கப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இன்று சமுதாயத்தில் வேரூன்றியிருக்கும் ஆணாதிக்கத்தினை மட்டுப்படுத்தி, பெண் உரிமையை மேம்படுத்திச் சமமாக நிலைநாட்ட வைக்கும் இயக்கமாகவே பெண்ணியம் அடையாளம் காணப்படுகின்றது.

சமுதாயத்தில் பெண்களின் நிலை

மானுடர் குழுக்களாகக் கூடி வாழத்தொடங்கிய தொன்மைக் காலங்களில் பெண்களே குழுக்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் ஆளுமையும் சக்தியும் கொண்டிருந்தனர். பிற்பட்ட காலங்களில் தாய்வழிச் சமுதாயம் மாற்றப்பட்டுத் தந்தைவழிச் சமுதாயம் உருவாகியது. பெண்கள்; தமது திறமைக்கும் தேவைக்கும் ஏற்ப சுயமான நிலைப்பாடு எடுக்க முடியாது, பிறரில் தங்கி இருக்க வேண்டிய நிலைக்குப் படிப்படியாகத் தாழ்ந்தனர். உடற்கூற்றமைப்பு, உளவியல், சமூகவியல், பண்பாடு முதலியவற்றின் காரணமாகப் பெண்களைப்; பலவீனர்களாகப்; பார்க்கும் தன்மை காலம் காலமாகக் பேணப்பட்டது. பெண்மீது பல வழிகளிலும் அடக்குமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. இவ்வாறு உரிமைகள் நசுக்கப்பட்டு, பெண்கள் பின்தங்கி இருந்த நிலைமையைக் கண்டுகொள்ளாது, சமூகம், பெண்களை அடிமைகள் போலவே ஆக்கி வைத்திருந்தது.

பெண்ணியத்தின் தோற்றம்

ஆண் மேலாதிக்கத்தினால் தமக்கு இளைக்கப்படும் அநீதியை பெண்கள் உணர்ந்தமையே பெண்ணியத்தின் தோற்றத்தின் அடிப்படைக் காரணம் எனலாம். காலப் போக்கில் பெண்களின் ஆளுமையும் திறமையும் மதிக்கப் பட்டு அங்கீகாரம் பெறும்போது, பெண்களின் சமத்துவமின்மை ஒரு சமூகப்பிரச்சனையாக உருப்பெற்றது. மேலும் வேலைவாய்ப்பின்மை, வேலைச்சமத்துவம் இன்மை, கல்வி மறுப்பு, குடி உரிமை மறுப்பு, விவாக இரத்துப் பெறும் உரிமை மறுப்பு முதலான பல காரணங்கள்; பெண்ணியச் சிந்தனை வலுப்பெறவும், மேலும் வளரவும் உரமூட்டின.

பெண் விடுதலைச் சிந்தனைகள் முற்காலங்களில் இடம் பெற்றிருந்த போதிலும், 19ஆம் நூற்றாண்டில் தான் மக்கள் மத்தியில் அவை கவனயீர்ப்புப் பெறத் தொடங்கியது. 1719இல் தோன்றிய ப p ர ஞ ; சு ப ; பு ர ட ; ச p , 1876இல் இடம்பெற்ற அமெரிக்கப் புரட்சி மு த ல h ன i வ மேலைத்தேயங்களில் பெண்ணியப் புரட்சிக்கு வித்திட்டன எனக் கூறப்படுகின்றது. பெண்ணியத்திற்கு அடிப்படையான சமத்துவம், சுதந்திரம் முதலான கருத்துக்கள் முதலில் பிரான்ஸ் நாட்டிலேயே தோற்றம் பெற்றன. ஆனால் ஐக்கிய அமெரிக்காவிலேதான் இக்கருத்துக்கள் பொதுமக்களால் பெருமளவில் ஆதரிக்கப்பட்டு, சக்தி வாய்ந்த பெண்ணிய இயக்கமாகத் தோன்றி மற்றைய நாடுகளிலும் பரவ ஆரம்பித்தது.

பெண்ணியவாதிகளின் வேதம்

நவீன வரலாற்றில், வர்க்க சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட மாக்சியத்திற்குப் பின், எழுச்சி பெற்ற சிந்தனையாகப் பெண்ணியச் சிந்தனை வரவேற்கப்பட்டது. இச்சிந்தனை பண்பாடு, இறையியல், மொழி, சமயம் என்பவற்றில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. 1848இல் நியூயோர்க்கில் நடந்த பெண்கள் உரிமை மாநாடு பெண்ணிய இயக்கத்தின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. 1892இல் “மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட்”; (ஆயுசுலு றுழுடுடுளுவுழுNநு ஊசுயுகுவு) என்ற ஆங்கிலப் பெண்மணி, பெண்களின் உரிமைகளை ந p ய h ய ப ; ப டு த ; த ல ; (ஏiனெiஉயவழைn ழக வாந சiபாவள ழக றுழஅநn) என்ற நூலை எழுதினார். இந்நூல்; பெண்ணியவாதிகளின் வேதமாகக் கருதப்பட்டது எனலாம்;.

வாக்களிக்கும் உரிமை

பெண்ணியவாதிகளின் அயராத துணிவு கொண்ட செயற்பாடுகளினாலும், மக்கள் ஆட்சி நாடுகளில் பெண்ணியக் கருத்துக்கள் பிரபலம் பெற்றதாலும் பெண்ணியம் அடைந்த முதல் வெற்றி, அரசியலில் பங்கு கொள்ளும் உரிமையைப் பெற்றமை எனலாம். நெடுங்காலமாக அறிவியல் வளர்ச்சி பெற்ற நாடுகளிலும்

பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டு இருந்தது. அந்த நிலை மாறி அமெரிக்காவில் 1918 லும், பிரித்தானியாவில் 1928லும், பிரான்சில் 1945லும் இருபத்தொரு வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற முடிந்தது. இதுவே சமூகத்திலும் அரசியலிலும் பல அடிப்படை மாறுதல்களை ஏற்படுத்தக்; காரணமாக அமைந்தது.

பெண்ணியத்தின் வெற்றி

பெண்ணியத்தின் செயற்பாடுகளின் முதல் அலை எனக் கூறப்படும் 1830 முதல் 1900 வரையான காலப் பகுதியில், பெண்ணியவாதிகள் அரசியல் உரிமைகளையும், சொத்துரிமைகளையும் வென்றெடுப்பதில் அதிக கவனம் செலுத்தினர். தொடர்ந்து இஸ்ரேல், இலங்கை, பிலிப்பைன்ஸ், இங்கிலாந்து, யேர்மனி, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களில் பெண்கள், பிரதம ஆட்சியாளர்களாக மக்களால் தெரிவு செய்யப்பட்டமை பெண்ணியத்தின் மகத்தான வெற்றியினைக் காட்டுவதாக அமைந்தது.

பெண்ணியத்தின் இரண்டாம் அலையான 1960 முதல் 1980 வரையான காலப் பகுதியில், சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையிலும் வேலைத் தலங்களிலும், மகப் பேற்று விருப்பிலும் பெண்கள் சம உரிமையை நிலைநாட்டினர். மூன்றாம் அலையாக, 1990ஆம் ஆண்டுகளின் பின் பெண்களுக்கு எதிரான அடக்குமுறையும், வன்முறையும் படிப்படியாக ஒழிக்கப்படும் நிலை ஓங்கி வளர்ந்தது. குடும்பப் பெருமைக்காகப் பழிவாங்கும் முறை, பாலியல் வன்முறை ஆகிய குற்றங்களுக்கு எதிரான சட்டப் பாதுகாப்புப் போன்ற பல செயற்பாடுகளில் சமூக சீர்திருத்தவாதிகளும் அரசியல்வாதிகளும்; முன்நிற்கின்றனர். தற்காலத்தில் நான்காவது அலையாக முன்பு பெறத் தவறிய மேலதிக உரிமைகளைப் பெறுவதில் தொடர்ந்து கவனயீர்ப்புகள் இடம்பெறுவதுடன் பெண்ணியல் இலக்கியங்களால் இவை வற்புறுத்தப்பட்டு சமூகங்களிலும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

பெண்ணிய இயக்க வகைகள்

பெண்களின்; சமத்துவமற்ற நிலையை மாற்றச் செயற்படும் பெண்ணியத்திலிருந்து, கோட்பாடு ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் பல பிரிவுகள் தோன்றின. வேறுபட்ட காலப்பகுதிகளில் வேறு வேறு நாடுகளில் சிந்தனை செயற்பாட்டு அளவிலும் வித்தியாசமான பிரிவுகள் தோன்றின. அவ்வாறு தோன்றிய பெண்ணிய இயக்க வகைகள் சில பின்வருமாறு ஆய்வாளர்களால் அறியக்கிடக்கின்றது.

மிதவாதப் பெண்ணியம் :

18ஆம் நூற்றாண்டிலே அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் முதன் முதலாகத் தோன்றிய பெண்ணியச் சிந்தனையே மிதவாதப் பெண்ணியம் என அழைக்கப்படுகின்றது. வரலாற்றுப் போக்கில் அமெரிக்காவில் சுதந்திரம், தன்னாட்சி என்ற கருத்துக்கள் வலுப்பெற்று சமுதாயத்தில் மாறுதல் ஏற்பட்ட போது இப்பெண்ணியச் சிந்தனையும் வலுப்பெற்றது என்று கூறப்படுகின்றது. “நுஅஅநடiநெ Pயமொரசளவ” எனும் பெண்மணி பிரித்தானிய பெணண்pய இயகக்தத்pல் தீவிர ஆரசியல ;செயறப்hடட்hளராக பஙக்hறற்pனாh.; பிரிதத்hனியாவில ;பெணக்ளுககு;ம் சமமாக வோட்டுரிமை வழங்கப்பட்டமையில், “ளரககசயபயவந” இயக்கத்தினருக்கும் பெரும் பங்கு உண்டு.

மாக்சியப் பெண்ணியம் :

கால்மாக்ஸ், ஏங்கல்ஸ்; ஆகியோரின் சமத்துவச் சித்தாந்தத்தின்படி ஆண், பெண் இருவரும் சட்டப்படி சம உரிமையுடையவர்களாக இருக்கவேண்டும். இக்கருத்து நிலை அடிப்படையில் இயங்குவதையே மாக்சியப் பெண்ணியம் என்று சமூகவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வகையான பெண்ணியவாதிகள் தந்தை வழிச் சமூக அமைப்பில் ஆண்கள் பெற்ற சொத்துரிமையே பெண்ணடிமைத்தனத்திற்கு வித்திட்டது எனும் கருத்துக்கொண்டவர்கள். இவர்கள் தீவிரவாதப் பெண்ணியம் சார் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவில்லை எனப்படுகின்றது.

சோசலிசப் பெண்ணியம் :

இதனைச் சமதர்மப் பெண்ணியம் என்றும் கூறுவர். எல்லாப் பெண்களும் பாலின அடிப்படையில் நசுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். பெண்கள் ஆண்களுக்கு நிகராக எல்லா நிலைகளிலும் ஈடுபடவேண்டும். ஆண்கள் தங்கள் ஆணாதிக்க மனப்பான்மையை மாற்றிக் கொள்ள வேண்டும், குழந்தைப் பராமரிப்பு முதலான இல்லற வேலைகளில் ஆண்கள் பங்கு கொள்ள வேண்டும் என்று பெண்ணிய வாதிகள் வலியுறுத்துகின்றனர். சமுதாயத்தில் இடம்பெறும் பொதுவேலைகளில் அரசியல் குடும்பம் உட்படப் பெண்கள் சரிசமமாக இருக்கவேண்டும் என்பதை இச் சிந்தனை வலியுறுத்துகின்றது. அத்துடன் சுதந்திர உணர்வு, கருத்தடை, குழந்தைப்பேற்றில் சுதந்திரம் முதலானவற்றையும் முதன்மைப் படுத்துகின்றது.

தீவிரவாதப்பெண்ணியம்:

பெணண் pயச ; சிநத் னைகளுககு; ப ; புதுவிளகக் ம ; கொடுககு; ம ; புரடச் pகரமான இக்கருத்துநிலை 1960களில் தோன்றியதென்பர். பெண்கள் ஒரு நசுக்கப்பட்ட வர்க்கத்தினர் என்றும், அவர்கள் பாலியல் ரீதியாகச் சுரண்டப்படுகிறார்கள் என்றும், அவற்றிலிருந்து விடுவிக்கப்படல் வேண்டும் என்றும் போராடுவதே தீவிரவாதப் பெண்ணியம் என்று கூறப்படுகின்றது. தீவிரவாதப் பெண்ணிய வாதிகள் ஆண்களை எதிரிகளாகக் கருதினர். பெண் விடுதலை பெறக் குழந்தை பெறுதலைப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். இது போன்ற தீவிரவாதப் பெண்ணியச்சிந்தனை பெரும் பாலாருடைய வரவேற்பினைப் பெறவில்லை என்று கூறப்படுகின்றது.

ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து மற்றைய நாடுகளிலும் பெண்ணியக் கோட்பாடு வரவேற்புப் பெற்றுள்ளது. இருப்பினும் பழமைவாதிகள் நிறைந்த ஆசிய நாடுகளிலும், மத்தியகிழக்கு நாடுகளிலும் பெண்களைத் தொடர்ந்தும் அடக்கு முறைக்கும், வன்முறைக்கும் ஆளாக்கும் மனப்;பான்மை காணப்படுகின்றது. சில நாடுகளில் அரசியல் சட்டங்கள் பெண்மைக்கு எதிராக இருந்த போதிலும் அவற்றை நடைமுறையில் கைக்கொள்ள முடியாதவாறு சமுதாயத்தில் புரையோடியுள்ள மூடநம்பிக்கைகள் தடையாக இருக்கின்றன. ஆணாதிக்கச் சிந்தனைகளின் அடிப்படையில், சில தீவிர மதவாதிகளும் பெண்ணியத்தை மறைமுகமாக எதிர்க்கும் போக்கையும் நாம் காணலாம்.

பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை வலியுறுத்திய முன்னோடிகள்

தமிழ்மக்களிடையே பெண்ணியம் சார்ந்த தமது கருத்துக்களை வலியுறுத்திய முன்னோடிகளில் வ.வே.சு ஐயர், ராஜராம் மோகன்ராய், பாரதியார், திரு.வி.க., பெரியார் ஈ.வே.ராமசாமி போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். தற்காலத்தில் சமூக மாற்றத்தினை அரசியல் சட்டவாக்கம் மூலம் ஏற்படுத்துதல் வேண்டும் எனவும் அதன் மூலமே உரிமைகளை நிலை நாட்டமுடியும் என்ற கருத்து நிலையே பெரும்பாலான கீழைத்தேயப் பெண்ணியச் சிந்தனையாளரிடம் காணப்படுகின்றது. பெண்ணியம் சார்ந்த சிந்தனைகள் பல இலக்கிய வடிவங்களின் கருப்பொருளாக அமைந்து பல தளங்களிலே தமது ஆய்வுப்புலத்தை விரிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.