| 1). அரி (சிங்கம்) | - அரியை மிருகங்களின் அரசன் என்று கூறுவர். |
| அறி (தெரிந்துகொள்ளுதல்) | - நாம் தமிழ்ச் சொற்களின் பொருள்களை அறியவேண்டும் |
| 2). எரி (எரித்தல்) | -வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. |
| எறி (எறிதல்) | -குமரன் எறிந்த கல் வீட்டுக் கண்ணாடியை உடைத்தது. |
| 3). இரை (உணவு) | -சிங்கம் காட்டில் இரை தேடச் சென்றது. |
| இறை (கடவுள்) | - - கோயில்களில் இறைவனைக் காணலாம். |
| 4).உரி (வெங்காயம்) | -வெங்காயத் தோல் உரிக்க வேண்டும். |
| உறி (தூக்கு) | -சில வீடுகளில் சட்டியும் பானையும் உறியில் இருக்கும். |
| 5). கரி (எரித்த விறகு) (யானை) | - கரி மிகவும் பெரிய காட்டு மிருகம். |
| கறி (உணவு வகை) | -எனக்கு மரக்கறி வகைகள் மிகவும் விருப்பம். |
| 6). குரை (குரைத்தல்) | - முன்னர் அறிமுகம் இல்லாதவர்களைக் கண்டால் நாய் குரைக்கும். |
| குறை (குற்றம்) | -நாம் மற்றவர்களிடம் குறை காணக்கூடாது |
| 7). தரி (அணிதல்) | - அரசன் தலையில் முடி தரித்திருந்தார். |
| தறி (வெட்டுதல்) | - காட்டு மரங்களைத் தறித்து வீடுகள் கட்டுவார்கள். |
| 8). நிரை (வரிசை) | -மாடுகள் நிரை நிரையாகச் சென்றன. |
| நிறை (பாரம்) | -கடையில் சில பொருட்களை நிறையின்படியே விற்பார்கள். |
| 9). பரி (குதிரை) | -பரிகளின் ஓட்டம் உலகில் பல நாடுகளில் மிகவும் பிரபல்யமானது. |
| பறி (பறித்தல்) | -திருடன் கைப்பையைப் பறித்துக்கொண்டு ஓடினான். |
| 10). பாரை (மீன்வகை) | -பாரை மீன் பலரால் விரும்பி உண்ணப்படும். |
| பாறை (கல்) | - கண்ணாடி பாறையில் வீழ்ந்து நொருங்கியது. |