பாடம் 3 : பயிற்சி 8

VIII). ஒன்றன் பால் : அஃறிணையில் ஒரு பொருளைக் குறிப்பது.

பலவின் பால் : அஃறிணையில் பல பொருட்களைக் குறிப்பது.

I)ஒன்றன் பால் சொற்களைப் பலவின் பால் சொற்களாக மாற்றுக.

1). தாமரைப் பூ குளத்தில் மலர்ந்தது.

.................................................................................................................................

2). பழம் நல்ல சத்துள்ளது.

.................................................................................................................................

3).குருவி வானத்தில் பறந்தது.

.................................................................................................................................

4). சிங்கம் காட்டில் வாழும் ஒரு மிருகம்.

.................................................................................................................................

5). எனது புத்தகம் தடித்த அட்டை உடையது

.................................................................................................................................

II)பலவின் பால் சொற்களை ஒன்றன் பால் சொற்களாக மாற்றுக.

1). வானரங்கள் கிளைகளில் அமர்ந்தன.

.................................................................................................................................

2). மேகங்களே உமது சேதிகளைச் சொல்லுங்கள்.

.................................................................................................................................

3).குளத்து மீன்களைக் கொக்குகள் உண்டன.

.................................................................................................................................

4). இரையும் வாகனங்களால் தெருக்களில் விபத்துக்கள் ஏற்படலாம்.

.................................................................................................................................

5). நகரங்களில் பெரிய நூலகங்கள் அமைந்துள்ளன.