பாடம் 12: ஐக்கிய நாடுகள் சபை

இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் இடம்பெற்ற முதலாம், இரண்டாம் மகா யுத்தங்களினால் உலகத்தின் அமைதி பெருமளவில் பாதிக்கப்பட்டது. பயங்கரமான அப் போர்களின் விளைவாகப் பல நாடுகளைச் சேர்ந்த பல கோடி மக்கள் அளப்பரிய இழப்புக்களுக்கும், சொல்லொண்ணாத் துன்பங்களுக்கும் ஆளானார்கள். அவ்வாறான துர்ப்பாக்கிய நிலை ஏற்படுவதனை உலகெங்கும் வாழ்ந்த மனிதாபிமானம் கொண்ட மக்களின் தலைவர்கள் விரும்பவில்லை. கொடிய போர்கள் உலகத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதை வல்லரசு நாடுகளின் தலைவர்கள் உணர்ந்து தமக்குள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அமைதிக்கு வழிவகுக்க முயன்றனர்.

தேசங்களின் அணி

பேரழிவுகளைத் தடுக்கும் நோக்கத்தினை முன்வைத்து ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த “தேசங்களின் அணி” (League of Nations) என்று பெயர் கொண்ட சபை, இரண்டாம் உலகப் போரினைத் தடுக்க முடியாது வலிமை குன்றியிருந்தது. எனவேதான் 1943ம் ஆண்டு, அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, இரஸ்சியா ஆகிய வல்லரசு நாடுகள் மாஸ்கோவில் ஒன்று கூடி அரசியல் வலுக் கொண்ட புதிய ஒரு சபையைத் தோற்றுவதற்கான பேச்சு வார்த்தைகளை நடாத்தின. அதனைத் தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோவில் 1945ம் ஆண்டு அக்டோபர் 24ம் திகதி ஐம்பது நாடுகள் கலந்து கொண்ட மகாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபைக்கென ஒரு தனிச் சாசனம் உருவாக்கப்பட்டது.

முதலாவது ஒன்றுகூடல்

உலக சமாதானத்தை விரும்பும் எந்த ஒரு நாடும், ஐக்கிய நாடுகள் சாசனத்தினை ஏற்று, அதனை நடைமுறைப்படுத்தும் இடத்து, ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடாக அங்கீகாரம் பெறும் அதிகாரம் பெற்றது. அதன் பிரகாரம் இலண்டன் மாநகரில் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மெதடிஸ்ட்” மத்திய மண்டபத்தில், அங்கத்துவ நாடுகள், 1946ம் ஆண்டு, ஜனவரி பத்தாம் திகதி ஒன்று கூடினர். அங்கு இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதலாவது கூட்டத்தில் ஐம்பத்தொரு நாடுகளின் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். எதிர்காலத்தில் மக்களின் சமாதான வாழ்வினை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உடன்படிக்கையை அவர்கள் செய்து கொண்டனர். வேறு பல நாடுகளும் இச் சபையில் இணைந்து கொள்ளவே படிப்படியாக வளர்ச்சி பெற ஆரம்பித்த ஐக்கிய நாடுகள் சபை, தற்போது 193 அங்கத்துவ நாடுகளைக் கொண்டு செயற்படுகின்றது.

சபையின் நோக்கம்

ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை நோக்கம் உலக அமைதியையும், சமாதானத்தினையும் பேணுவதன் மூலம், மக்களின் நல்வாழ்வுக்காகப் பாடுபடுவதேயாகும். அதன் செயற்பாடுகள் யாவும் பாகுபாடு இன்றி மக்கள் யாவரினதும் சமத்துவம் பேணும் உரிமைகளையும் அவர்களின் சுயநிர்ணய உரிமைகளையும் மதிக்கும் வண்ணம் அமைந்தவை. நாடுகளுக்கு இடையே ஆதிக்க வெறி கொண்டு எழும் ஆக்கிரமிப்புகளைக் கண்டிப்பதிலும், ஒடுக்குவதிலும் இச் சபை பெரும் பங்கு கொள்கின்றது. இப் பன்னாட்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சமமானவர்களாகக் கருதப்படுகின்றார்கள்.

செயற்பாடுகள்

உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை சமாதான முறையில் தீர்த்துக் கொள்ளுமாறு எதிர்பார்க்கப்படுகின்றது. எக்காரணம் கொண்டும் உறுபபு; நாடுகள ;பிற நாடடி;ன ;உள ;விவகாரஙக்ளில ;தலையிடுதல ;தவிhக்க்பப்டல் வேண்டும். பன்னாட்டுச் சட்டங்களின்படி, நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து அமைதியை ஏற்படுத்துவதில் கூட்டுச் செயற்பாடுகள் இடம்பெறும். வேறுபட்ட நாடுகளில் காணப்படும் சமூக, பொருளாதார, பண்பாட்டுச் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதிலும் ஐக்கிய நாடுகள் சபை முன்னிற்கின்றது. அது ஐந்து பெரும் பிரிவுகளாகச் செயற்படுகின்றது.

சபையின் அங்கங்கள்

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலகம் நியூயோர்க்கில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கத்துவ உரிமை கொண்ட எல்லா உறுப்பு நாடுகளையும் அதன் பொதுச் சபை உள்ளக்கியதாக அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் முதல்வராக பொதுச் செயலாளர் பதவி வகிக்கின்றார். புவியியல் பகுதி முறையிலான சுழற்சி முறையில் செயலாளரின் தெரிவு இடம் பெறுகின்றது. நிரந்தர அங்கத்துவம் உள்ள நாட்டைச் சேராத ஒருவர்தான் பொதுச் செயலாளர் பதவிக்குத் தெரிவு செய்யப்படலாம் என்ற விதிமுறையும் கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவர்கள் வருடம் ஒரு தடவை கூடுவார்கள். இச் சபை கூடும் போது தத்தமது கருத்துக்களைப் பரிமாறுவதற்கு எல்லா உறுப்பு நாடுகளுக்கும் இரு வார காலம் அவகாசம் வழங்கப்படுகின்றது. இச் சபையில் முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றும் போது ஒவ்வொரு நாட்டுக்கும் வாக்களிக்கும் அதிகாரம் உண்டு. சபையில் தீர்மானங்கள் எடுக்கப்படுவதற்கு ஒரு நாட்டிற்கு ஒரு வாக்குப்படி மூன்றில் இரண்டு வீத வாக்குகள் வேண்டப்படுகின்றன. செயலகத்தினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டபோதிலும் அங்கத்துவ நாடுகள் கட்டுப்பாடின்றி தன்னிச்சையான முடிபுகளை எடுக்கும் சுதந்திரம் கொண்டவையாகும். ஐ.நா வின் வேறு செயற்பாட்டு மையங்கள் ஜெனீவாவிலும், வியன்னாவிலும், நைரோபியிலும் அமைக்கப்பட்டுள்ளன. பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐ.நா சபையின் அலுவலகங்களில் செயலாற்றுகின்றனர். இதன் அலுவல் மொழிகளாக ஆங்கிலம், பிரெஞ்சு, இரஸ்சியன், ஸ்பானிஷ் ஆகிய ஐரோப்பிய மொழிகளும், சீன, அரேபிய மொழிகளும் இடம்பெறுகின்றன.

நியூயோர்க்கில் அமைந்துள்ள பாதுகாப்புச் சபை பதினைந்து உறுப்பு நாடுகளைக் கொண்டது. அதன் நிரந்தர உறுப்பு நாடுகளாக ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம், இரஸ்சியா, பிரான்சு, சீனா ஆகிய நாடுகள் விளங்குகின்றன. ஐக்கிய நாடுகளின் பச்சை அறிக்கையின்படி, நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு புதிதாக ஒரு சட்டத்தினை நிறைவேற்றும் போது அதனைத் தடுக்கும் அதிகாரம் (Pழறநச ழக ஏநவழ) உண்டு. தீய சக்திகளால் ஆபத்து ஏற்படாது சர்வதேச பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சக்தி வாய்ந்த சபையாக, பாதுகாப்புச் சபை செயல்படுகின்றது.

கூட்டுறவு

ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூக சபை ஐம்பத்து நான்கு உறுப்பு நாடுகளைக் கொண்டது. இச் சபை அங்கத்துவ நாடுகளின் ஏற்றத்தாழ்வு கொண்ட பொருளாதார, சமூக தரங்களைப் கண்காணித்துப் பேணும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. அந்தந்த நாடுகளின் அபிவிருத்திக்கு வேண்டிய பொருத்தமான திட்டங்களை அறிவுறுத்தும் செயல்களையும் இச் சபை முன்னெடுக்கின்றது. மேலும் அங்கத்துவ நாடுகளிடையே கூட்டுறவை வலுப்படுத்தும் பலவிதப்பட்ட செயற்பாடுகளையும் இச்சபை மேற்கொள்கின்றது.

நீதி மன்றம்

ஐ.நா சபையின் அனைத்துலக நீதி மன்றம் பெல்ஜியம் நாட்டிலுள்ள “ஹேக்” நகரில் அமைந்துள்ளது. இம்மன்றத்திற்குப் பதினைந்து நீதிபதிகள் பொதுச் சபையினால் தெரிவு செய்யப்படுவார்கள். அவர்களின் பதவிக் காலம் ஒன்பது வருடங்கள் ஆகும். அனைத்துலக நீதிமன்றம் சர்வதேச சட்டங்களின் பிரகாரம் நாடுகள் மத்தியில் எழும் பிணக்குகளை விசாரிக்கும் அதிகாரம் கொண்டு விளங்குகின்றது.

பொதுச்செயலாளர் தகுதிகள்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் இரு தடவைகள் மாத்திரம் பதவி வகிக்க முடியும். அவ்வாறு தெரிவு செய்யப்படுவோருக்கு உயர்மட்ட நிர்வாகத் திறமையும், சர்வதேச இராசதந்திர அனுபவமும் அவசியம். நடுநிலைப் பண்பும், பன்முக ஆளுமையும் கொண்டவர்களே இப் பதவிக்குத் தெரிவு செய்யப்படுகின்றனர். கொரிய நாட்டைச் சேர்ந்த பான்கீ மூன் என்பவர் எட்டாவது பொதுச் செயலராக இரு தடவைகள், 2016ம் ஆண்டு வரை கடமை புரிந்தார். அவரைத் தொடர்ந்து போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமரான அந்தோனியா கட்டெரெஸ் (யுவெழnழை புரவநசசநள) என்பவர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அங்கத்துவ நாடுகளின் ஆதரவில் இயங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செல்வாக்கு பல நாடுகளின் அரசியல் பொருளாதார, சமூக செயற்பாடுகளில் காணப்பட்டபோதும் அது தனது பூரணமான அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதில் பல சட்டபூர்வமான சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கின்றது. சபையின் நடவடிக்கைகள் பற்றிய பல விமரிசனங்கள் இருப்பினும், உலகில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை ஐக்கிய நாடுகள் சபை பொது மக்களுக்கு வழங்குகி;ன்றது.