பாடம் 11 : பயிற்சி 3

III) கீழேதரப்பட்ட தற்கூற்று வசனங்களை பிறர்கூற்றாக மாற்றி எழுதுக.

தற்கூற்று ஒருவர் தானே சொல்வது. (னுசைநஉவ ளிநநஉh) ஒருவர் சொன்னதை இன்னொருவர் எடுத்துக் கூறுவது பிறர்கூற்று. (ஐனெசைநஉவ ளிநநஉh) தற்கூற்றுப் பகுதியை பின்வருமாறு மேற்கோள் “............” குறியிட்டு காட்டல் வேண்டும்

எ:கா: “நான் இன்று கோவிலுக்குப் போகிறேன்” என்றாள் சியாமளா. பிறர்கூற்று --- சியாமளா இன்று கோயிலுக்குப் போவதாகச் சொன்னாள்.

1) “நான் இன்று தமிழ் பள்ளிக்குப் போகமாட்டேன்” என்றான் தம்பி.

...................................................................................................................................................................................................................

2) சாந்தி தன் சிநேகிதி பொன்னிக்கு “என் வகுப்பு மாணவர்களுடன் திங்கள்கிழமை துறைமுகம் பார்க்கப் போகிறேன்” என்று கூறினாள்.

...................................................................................................................................................................................................................

3) “நான் சென்றவாரம் நூலகத்தில் ஒரு கதைப் புத்தகத்தை எடுத்தேன்” எனச் சொன்னான் கண்ணன்.