பாடம் 11 : வீட்டுவேலை

I) பாற்கட்டி (பனீர்) குழம்பு செய்யும் முறை. செய்முறை ஒழுங்குமாறித் தரப்பட்டுள்ளது. சரியான ஒழுங்கைக் குறிக்கும் எழுத்துகளை கீழே தரப்பட்ட பெட்டிகளில் எழுதுக.

a) பனீர் துண்டுகளை கலவையில் பிரட்டி ஊறவிடவும்.

b) சட்டியில் எண்ணைவிட்டு சூடாக்கவும். எண்ணை காய்ந்தபின் இரண்டு நறுக்கிய வெண்காயமிட்டு வதக்கவும்

c) கடைசியில் கொத்தமல்லி தழையை இட்டு அழகுசெய்து பரிமாறவும்.

d) பாற்கட்டியை சிறு துண்டுகளாக வெட்டவும்

e) லெமன் சாறு, இஞ்சி விழுது, துண்டாக வெட்டிய பச்சை மிளகாய், நசித்த உள்ளி, நறுக்கிய கொத்தமல்லி தழை. அரை தேக்கரண்டி மிளகாய் பொடி ஆகியவற்றை கலந்து ஊறல் கலவை ஆக்கவும்,

f) மேசைக்கரண்டி கட்டித்தயிர், 125 அட பால், சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து இளஞ் சூட்டில் 5 நிமிடம் அவிய விடவும் .

g) பனீர் கலவையை சேர்த்து 5 நிமிடம் இளஞ்சூட்டில் வேகவிடவும்

( ) : ( ) : ( ) : ( ) : ( ) : ( ) : ( )

II) உங்கள் வீட்டின் அருகே உள்ள சந்தியில் சிலர் நின்று பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பதை காண்கிறீர். இதுபற்றி அருகிலுள்ள காவல்துறை அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதுக.